/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கள்ளப்பள்ளி பஞ்.,ல் மோட்டார் பழுதால் குடிநீர் பற்றாக்குறை
/
கள்ளப்பள்ளி பஞ்.,ல் மோட்டார் பழுதால் குடிநீர் பற்றாக்குறை
கள்ளப்பள்ளி பஞ்.,ல் மோட்டார் பழுதால் குடிநீர் பற்றாக்குறை
கள்ளப்பள்ளி பஞ்.,ல் மோட்டார் பழுதால் குடிநீர் பற்றாக்குறை
ADDED : ஏப் 27, 2025 04:52 AM
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி பஞ்சாயத்தில் மின் மோட்டார் பழுதால், காவிரி குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டையில், கள்ளப்பள்ளி பஞ்சாயத்து செயல்படுகிறது. சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து, மின்மோட்டர் இயக்கி குடிநீர் தொட்டியில் நீரேற்றி, ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்-தது. சில மாதங்களாக, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், வாரத்திற்கு ஒருநாள் மட்டும் காவிரி நீர் வினியோகம் செய்யப்பட்டது.
தற்போது, மின்மோட்டார் பழுது காரணமாக, குடிநீர் வினி-யோகம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால், வார்டுகளில் வசிக்கும் மக்கள், குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். காவிரி நீர் கிடைக்காததால், உப்பு நீரை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணராயபுரம் யூனியன் நிர்வாகம், கள்ளப்பள்ளி பஞ்சாயத்து வார்டு மக்களுக்கு, காவிரிநீர் முறையாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.