/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் 6.76 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டப் பணி துவக்கம்
/
கரூரில் 6.76 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டப் பணி துவக்கம்
கரூரில் 6.76 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டப் பணி துவக்கம்
கரூரில் 6.76 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டப் பணி துவக்கம்
ADDED : ஏப் 13, 2025 04:49 AM
கரூர்: கரூர் மாநகராட்சி, ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பகுதியில், 6.76 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகளை, அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
கரூர் மாநகராட்சி, தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோவில் கீழ்பாகத்தில், 6.76 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, முடிவுற்ற பணி-களின் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பணி-களை தொடங்கி வைத்தார்.அதில், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் பஞ்., பெரியாண்டார் கோவில் அக்ரஹாரம் அமராவதி ஆற்றில், 26 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 ஹெச்.பி,, பம்ப் செட் அமைக்கும் பணி, அமரா-வதி ஆறு முதல் அக்ரஹாரம் வரை, 25 லட்சம் ரூபாய் மதிப்-பீட்டில் பம்பிங் அமைக்கும் பணி, தில்லை நகர், ராஜா நகர், கோதை நகர், காயத்ரி நகர் பகுதிகளுக்கு, 42 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பம்பிங் மெயின் அமைக்கும் பணி உள்பட பல்-வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.
பின், கரூர் பஸ் ஸ்டாண்டில் ஆறு புறநகர் பஸ், இரண்டு டவுன் பஸ் என எட்டு புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்-சியில், எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநக-ராட்சி மேயர் கவிதா, டி.ஆர்.ஓ., கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சுதா, மாநகராட்சி மண்டல தலைவர் ராஜா உள்பட பலர் பங்கேற்-றனர்.