/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து துவக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி
/
ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து துவக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி
ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து துவக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி
ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து துவக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 22, 2025 01:26 AM
கரூர், க.பரமத்தி அருகே, ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் என்ற இடத்தில், அணை கட்டப்பட்டுள்ளது. நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல, பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2019ல், மழை காரணமாக, 18 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் முழு கொள்ளளவான, 26.9 அடியை தண்ணீர் எட்டியது. இதனால், அணையில் இருந்து, நொய்யல் வாய்க்கால் பகுதியில் உள்ள, 19 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல் கடந்த, ஐந்து ஆண்டுகளாக ஆத்துப்பாளையம் அணையில் இருந்து ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி ஆத்துப்பாளையம் அணைக்கு வினாடிக்கு, 294 கன அடி தண்ணீர் வந்தது. நொய்யல் வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 26.90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 20.51 அடியாக இருந்தது. இதனால், ஆத்துப்பாளையம் அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.