/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
ADDED : அக் 19, 2024 01:02 AM
மாயனுார் கதவணைக்கு
தண்ணீர் வரத்து குறைவு
கரூர், அக். 19-
மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று குறைந்தது.
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 5,783 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 4,424 கன அடியாக குறைந்தது. சம்பா சாகுபடிக்காக, டெல்டா பாசன பகுதிக்கு, 3,404 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. கீழ் கட்டளை வாய்க்கால், தென் கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 1,320 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 754 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 567 கன அடியாக குறைந்தது. 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 84.98 அடியாக இருந்தது. மழை காரணமாக அமராவதி ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 284 கன அடி தண்ணீர் வந்தது. 29.44 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 19.94 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.