குடிநீர் தொட்டியில் குழாய் சேதம் சாலையில் வீணாக ஓடும் தண்ணீர்
குடிநீர் தொட்டியில் குழாய் சேதம் சாலையில் வீணாக ஓடும் தண்ணீர்
ADDED : செப் 21, 2026 06:18 AM
கரூர்:கரூர் அருகே, மேல்நிலை குடிநீர் தொட்டி குழாய் சேதமடைந்துள்ளதால், குடிநீர் வீணாக சாலையில் பாய்ந்தோடி வருகிறது.
கரூர்
மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பஞ்., யூனியன் கட்டளை - மாயனுார் சாலை
மேலமாயனுாரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில்,
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள்
பயன்பாட்டுக்காக சில ஆண்டுகளுக்கு முன், குடிநீர் மேல்நிலை தொட்டி
கட்டப்பட்டது. அதன் மூலம், அரசு காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்கு
குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில், மேல்நிலை
குடிநீர் தொட்டியில் உள்ள குழாய் சேதம் அடைந்துள்ளது. இதனால்,
மேல்நிலை தொட்டியில் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில்
சென்ற வண்ணம் உள்ளது. மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்
என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
