/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே குகைவழி பாதையில் ஊற்றுநீர் வாகனங்கள் செல்ல முடியாமல் பாதிப்பு

ADDED : டிச 14, 2025 08:42 AM

குளித்தலை: ரயில்வே குகை பாதையில், ஊற்றுநீர் தேங்கி வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
குளித்தலை அடுத்த மேட்டுமருதுார் சாலையில், திருச்சி - கரூர் ரயில்வே பாதையில், குகை வழி பாதை அமைக்கப்பட்டு மக்கள் பயன்-பாட்டில் இருந்து வருகிறது. குகை வழிப்பா-தையில் மின்விளக்குகள் அமைக்காமலும், ஊற்று நீரை உடனுக்குடன் வெளியேற்றாமலும் இருந்து வருகின்றனர்.
இந்த பாதையை, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று முன்-தினம் இரவு குகை வழி பாதையில், ஒரு அடி ஆழத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால் டிவிஎஸ் எக்ஸெல். ஸ்கூட்டி உள்ளிட்ட இரு சக்-கர வாகனங்கள், சைக்கிள்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் குகை வழி பாதையில், மின்-விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் பயத்-துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, மருதுார் குகை வழி பாதையில் உள்ள ஊற்று நீரை உடனுக்குடன் வெளியேற்றி, மின் விளக்குகளை போர்க்கால அடிப்படையில் நிறு-விட, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.