/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற தொடர்ந்து வலியுறுத்துவோம்'

ADDED : அக் 03, 2024 07:26 AM
கரூர்: ''ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலி-யுறுத்தி வருகிறோம்,'' என, பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச்செயலர் கருப்பையா கூறினார்.
கரூரில், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட நிர்வா-கிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலர் கருப்பையா தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவராக ராமச்சந்திரன், செயலர் அன்பழகன், ஒருங்கிணைப்பாளர்கள் ஜெய-கோபால், மருதைவீரன், மாவட்ட துணைத் தலைவர் தங்கம், மாவட்ட பொதுச்செயலர் தஸ்வின், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டனர்.பின், மாநில பொதுச்செயலர் கருப்பையா நிரு-பர்களிடம் கூறுகையில்,'' முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது குறித்து, தலைமை முடிவு செய்யும். நடிகர் விஜயின் தமி-ழக வெற்றி கழகத்தின் கொடியில், யானை சின்னம் பொருத்தப்பட்டு இருப்பது குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்-டுள்ளது. சட்டரீதியாக சந்திப்போம். இவ்வாறு கூறினார்.