/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாணவியை மார்பிங் செய்து ஆபாச போட்டோ அனுப்பியவருக்கு வலை
/
மாணவியை மார்பிங் செய்து ஆபாச போட்டோ அனுப்பியவருக்கு வலை
மாணவியை மார்பிங் செய்து ஆபாச போட்டோ அனுப்பியவருக்கு வலை
மாணவியை மார்பிங் செய்து ஆபாச போட்டோ அனுப்பியவருக்கு வலை
ADDED : மே 09, 2024 06:28 AM
கரூர் : இன்ஸ்டாகிராமில், மாணவியை மார்பிங் செய்து ஆபாச போட்டோ அனுப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 பயின்று வரும் மாணவி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, அவருக்கு இன்ஸ்டாகிராம் ஐ.டி.,யில் இருந்து மெசேஜ்கள் வந்துள்ளன. இந்நிலையில் மர்ம நபர் ஒருவரின் ஐ.டி.,யில் இருந்து, மாணவியின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசமான போட்டோ அனுப்பி உள்ளனர். இதை பார்த்த மாணவி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள், கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.