/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜன 03, 2026 07:58 AM
கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று ஆருத்ரா தரிசனத்தையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா கடந்த டிச., 26ல் திருவெம்பாவை, அபி ேஷகம் மற்றும் உற்சவத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் வரை, நாள்தோறும் மாலை மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபி ேஷகம், நடராஜ மூர்த்திக்கு திருவெம்பாவை பாடுதல் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
நேற்று காலை, 9:45 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிறகு, பிச்சாண்டார் திருவீதி உலா மற்றும் அம்மன் தீர்த்தவாரிக்கு அமராவதி ஆற்றுக்கு போய் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
இன்று காலை, 5:00 மணிக்கு நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகமும், 10:00 மணி க்கு பஞ்ச மூர்த்திகள் ஊர்வலமும், மதியம், 3:00 மணிக்கு கோவில் முன், சித்சபா பிரவேசம் என்ற, மட்டையடி திருவிழாவும் நடக்கிறது.

