ADDED : அக் 13, 2026 06:04 AM
குளித்தலை; குளித்தலை அருகே பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாண்டில் தே.மு.தி.க., கரூர் புறநகர் மாவட்டம் சார்பில், விஜயகாந்த் பிறந்தநாள் விழா, தே.மு.தி.க., 22ம் ஆண்டு துவக்க விழா, சட்ட சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளருக்கு பாராட்டு விழா, மாநி-லங்களவை உறுப்பினராக செயல்படும் பொரு-ளாளர் சுதீஷூக்கு பாராட்டு விழா, பொது மக்க-ளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா என, ஐம்-பெரும் விழா நடைபெற்றது.
புறநகர் மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் ராஜசேகர், பொருளாளர் பஞ்சப்பட்டி சுப்பிரமணி, துணை செயலாளர் தாமோதரன், கிருஷ்ணராய-புரம் ஒன்றிய செயலாளர்கள் வேலுச்சாமி, முரு-கேசன், குளித்தலை நகர செயலாளர் விஜய-குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பாளராக மாணவ அணி துணை செயலாளர் பேராசிரியர் திருப்பதி பேசினார். கூட்டத்தில் ஐந்து மாணவியருக்கு உதவித்தொகை, 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்-கப்பட்டது.
