/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு 5,027 பேருக்கு நலத்திட்ட உதவி
/
கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு 5,027 பேருக்கு நலத்திட்ட உதவி
கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு 5,027 பேருக்கு நலத்திட்ட உதவி
கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு 5,027 பேருக்கு நலத்திட்ட உதவி
ADDED : நவ 19, 2025 03:43 AM
கரூர், கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, 5,027 பேருக்கு, 52.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.
கரூர் வெண்ணைமலையில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் நடப்பாண்டில், 122 கூடுதலாக பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 16 பகுதி நேர ரேஷன் கடைகள் முழு நேரமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தாயுமானவர் திட்டத்தின் மூலம், 65 வயதுக்கு மேல் உள்ள முதியோர்கள்,
மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகள்தோறும் சென்று பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 77 முதல்வர் மருந்தகங்கள் துவக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன், விவசாய கடன், கால்நடை வளர்ப்புக்கான கடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் மற்றும் பிற்படுத்தோர் நலத்துறை மூலம் டாப் செட்கோ கடன், டாம்கோ சிறுபான்மையினருக்கான கடன்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு பேசினார்.
இதையடுத்து, 1,455 பேருக்கு, 15.60 கோடி ரூபாய் மதிப்பில் பயிர்க்கடன், 1,467 பேருக்கு, 16.88 கோடி ரூபாய் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனுதவி, 75 பேருக்கு, 68 லட்சம் மதிப்பீட்டில் மத்திய கால கடனுதவி உள்பட, 5,027 பேருக்கு, 52.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தங்கவேல் வழங்கினார். விழாவில், கரூர் எம்.பி., ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

