/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வ.உ.சி., நினைவு நாளில் பா.ஜ.,வினர் அஞ்சலி
/
வ.உ.சி., நினைவு நாளில் பா.ஜ.,வினர் அஞ்சலி
ADDED : நவ 19, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், பா.ஜ., ஓ.பி.சி., அணி சார்பில் கப்பலோட்டிய தமிழர், வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில், ஓ.பி.சி., அணி கரூர் மாவட்ட தலைவர் சாரங்கபாணி தலைமை வகித்தார். வ.உ.சி., சிலைக்கு, ஓ.பி.சி அணி மாநில செயலர் கோபிநாத், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், ஓ.பி.சி.,
அணி சமூக ஊடக மாநில பொறுப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம், ஓ.பி.சி., அணி மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

