/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பாரதிய மஸ்துார் சங்கத்தில் நலவாரிய உறுப்பினர் பதிவு முகாம்
/
கரூர் பாரதிய மஸ்துார் சங்கத்தில் நலவாரிய உறுப்பினர் பதிவு முகாம்
கரூர் பாரதிய மஸ்துார் சங்கத்தில் நலவாரிய உறுப்பினர் பதிவு முகாம்
கரூர் பாரதிய மஸ்துார் சங்கத்தில் நலவாரிய உறுப்பினர் பதிவு முகாம்
ADDED : டிச 08, 2024 01:14 AM
கரூர் பாரதிய மஸ்துார் சங்கத்தில்
நலவாரிய உறுப்பினர் பதிவு முகாம்
கரூர், டிச. 8-
கரூர் வெங்கமேடு, பாரதிய மஸ்துார் சங்க, 70ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர் பதிவு செய்யும் முகாமை, இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி தொடங்கிவைத்தார்.
முகாமில், அமைப்புசாரா கட்டுமான, ஓட்டுநர், சுயவேலை உள்பட பல்வேறு தினக்கூலி தொழிலாளர்கள் பதிவு செய்தனர். இதன்மூலம் அடையாள அட்டை பெற்று, உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி, ஓய்வூதியம், இயற்கை, விபத்து மரணம் ஆகியவற்றுக்கு உதவி தொகைகளை பெறமுடியும். நலவாரியத்தில் பதிவு செய்ய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கிக்கணக்கு புத்தகம், வயதுக்கான ஆவணங்களை கொண்டு வந்து பலரும் பதிவு செய்தனர். இந்த முகாம் இன்றும் நடக்கிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என, பாரதிய மஸ்துார் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.