/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளியில் நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
/
பள்ளியில் நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
ADDED : செப் 29, 2024 01:20 AM
பள்ளியில் நலப்பணி
திட்ட சிறப்பு முகாம்
அரவக்குறிச்சி, செப். 29-
காலாண்டு விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்றனர்.
பள்ளப்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், காலாண்டு விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் கடந்த, 28ம் தேதி துவங்கியது. அக்.,4 வரை நடைபெற உள்ளது. பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 30க்கும் மேற்பட்டோர் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் பங்கேற்றனர்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஹாரிஸ் தலைமையில், பள்ளபட்டியின் பல்வேறு இடங்களில் மரம் வளர்ப்பு, சாலை சீரமைப்பு, எழுத்தறிவு திட்டங்கள், வழிபாட்டு துாய்மை பணிகள், விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாணவர்கள் செய்தனர். விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில், நாட்டு நலப்பணித் திட்ட பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.