/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.7.99 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கல்
/
ரூ.7.99 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 05, 2024 12:23 PM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்பட, 530 மனுக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இதில் மாற்றுத் திறனாளிகளிடம் மட்டும், 65 மனுக்கள் பெறப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆறு பேருக்கு தலா, 96,011 ரூபாய் மதிப்பிலான, இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், ஏழு பேருக்கு தலா, 2,780 விதம், 19,460 ரூபாய் மதிப்பீட்டில் காதொலி கருவி உள்பட, 29 பேருக்கு, ஏழு லட்சத்து, 99 ஆயிரத்து, 511 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் இளங்கோவன், உதவி இயக்குனர் (காலல்) கருணாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

