/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆயுத பூஜையையொட்டி குவிந்த வெள்ளை பூசணி
/
ஆயுத பூஜையையொட்டி குவிந்த வெள்ளை பூசணி
ADDED : அக் 08, 2024 04:08 AM
கரூர்: ஆயுத பூஜையையொட்டி, வெள்ளை பூசணிக்காய் கரூரில் விற்ப-னைக்கு குவிந்துள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வரும், 11, 12ல் கொண்டாடப்படுகிறது.
அப்போது வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் திருஷ்டி பரிகாரத்-துக்காக நீர்ப்பூசணி என, அழைக்கப்படும் வெள்ளை பூசணியை கட்டுவது வழக்கம். மேலும், சிலர் வெள்ளை பூசணியை திருஷ்டி கழித்து, சாலையில் உடைப்பதுண்டு.இந்நிலையில், வெள்ளை பூசணி கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு அதிகளவில் வரத்தாகி உள்-ளது.
கரூர் மாவட்டத்தில், வெள்ளை பூசணி சாகுபடி அதிகளவில் இல்லை. எனவே திண்டுக்கல், அரியலுார், தேனி மாவட்டங்-களில் இருந்து வெள்ளை பூசணி விற்பனைக்கு கொண்டு வரப்-பட்டுள்ளது. ஒரு கிலோ, 25 முதல், 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.