/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டுக்குள் 'ஏசி' மெஷின் மீது 10 நாளாக 'கூலாக' வாழ்ந்த வெள்ளை சாரை பாம்பு
/
வீட்டுக்குள் 'ஏசி' மெஷின் மீது 10 நாளாக 'கூலாக' வாழ்ந்த வெள்ளை சாரை பாம்பு
வீட்டுக்குள் 'ஏசி' மெஷின் மீது 10 நாளாக 'கூலாக' வாழ்ந்த வெள்ளை சாரை பாம்பு
வீட்டுக்குள் 'ஏசி' மெஷின் மீது 10 நாளாக 'கூலாக' வாழ்ந்த வெள்ளை சாரை பாம்பு
ADDED : ஜூலை 20, 2025 05:38 AM
ஈரோடு: ஈரோட்டில் படுக்கை அறையில், 'ஏசி' இயந்திரம் மீது, 10 நாளாக 'கூலாக' வாழ்ந்த, வெள்ளை சாரை பாம்பு சிக்கியது.
ஈரோடு, பெரியசேமூரை அடுத்த வி.ஜி.பி., கார்டன் சோழன் நகரை சேர்ந்தவர் காமராஜ், 70; வீட்டில் மனைவியுடன் வசிக்-கிறார். இவர்களின் மகன், மருமகள் பெங்களூருவில் ஐ.டி., நிறு-வனத்தில் பணிபுரிகின்றனர். வீட்டு படுக்கை அறையில் 'ஏசி' இயந்திரம் உள்ளது. மகன் வரும் சமயத்தில் மட்டும் பயன்படுத்தி-யுள்ளனர்.
கடந்த, 10 நாட்களாக இயந்திரத்தின் மீது வால் தென்பட்டுள்-ளது. எலியாக இருக்கும் என தம்பதியர் நினைத்து விட்டனர். இந்-நிலையில் நேற்று காலை, இறந்து போன ஒரு எலி, 'ஏசி' இயந்-திரம் மீது இருந்து விழுந்துள்ளது. இதனால் காமராஜ் சந்தேகப்-பட்டு கட்டிலில் மீது ஏறி பார்த்தபோது, இயந்திரத்தின் மீது பாம்பு சுருண்டு படுத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பாம்பு பிடி வீரர் யுவராஜை அழைத்தார். சிறிது நேரத்தில் வீட்-டுக்கு சென்றவர், பாம்பை பிடிக்க முயன்றார். அப்போது மின்னல் வேகத்தில் இறங்கி கட்டிலுக்கு அடியில் பதுங்கியது. ஒருவழியாக போராடி பிடித்தார். வெள்ளை சாரை பாம்பு, ஏழு அடி நீளத்தில் இருந்தது. பிறகு வனத்துறையினரிடம் பாம்பை ஒப்படைத்தார். பத்து நாட்கள் வீட்டுக்குள் பாம்பு கூலாக வாழ்ந்தது, அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.