sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

யார் அந்த சார்? போஸ்டர் கரூரில் 2 பேர் மீது வழக்கு

/

யார் அந்த சார்? போஸ்டர் கரூரில் 2 பேர் மீது வழக்கு

யார் அந்த சார்? போஸ்டர் கரூரில் 2 பேர் மீது வழக்கு

யார் அந்த சார்? போஸ்டர் கரூரில் 2 பேர் மீது வழக்கு


ADDED : டிச 30, 2024 03:30 AM

Google News

ADDED : டிச 30, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், தி.மு.க., பிரமுகர் எனவும், சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்புள்ளதாகவும் அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் புகார் கூறி வருகின்றன.

பாலியல் புகாரை கண்டித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் கடந்த, 27ல் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் தள்ளி வைக்கப்-பட்ட ஆர்ப்பாட்டம் இன்று நடக்கவுள்ளது. இந்நிலையில் தமி-ழகம் முழுவதும் அ.தி.மு.க., ஐ.டி., விங்க் சார்பில், பாலியல் புகாரால் பாதிக்கப்பட்ட மாணவி குறிப்பிட்டுள்ளதாக வெளி-யான, யார் அந்த சார்? என்ற போஸ்டர் இ.பி.எஸ்., படத்துடன் நேற்று முன்தினம் இரவு ஒட்டப்பட்டது. கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் இந்த போஸ்டர் நேற்று ஒட்டப்பட்டிருந்தது. இதை போலீசார் கிழித்து எறிந்தனர்.

கரூர்-கோவை சாலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக சுவரில், போஸ்டரை ஒட்டிய கூலி தொழிலாளர்கள் செல்வராகவன், 64, மணி, 64, மீது, கரூர் டவுன் போலீசார் வழக்-குப்பதிவு செய்துள்ளனர்.

புளியம்பட்டியிலும்...

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., - ஐ.டி., விங் சார்பில், புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, சத்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில், இந்த போஸ்டர்கள் நேற்று

ஒட்டப்பட்டிருந்தன.






      Dinamalar
      Follow us