ADDED : அக் 20, 2026 01:28 AM
அ நிறம் | அளவு
குளித்தலை: குளித்தலை அடுத்த திம்மாச்சிபுரம்
கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர், 35; சமையல் தொழிலாளி. இவரது மனைவி சந்தியா, 30. இவர், கடந்த, 16 காலை, 7:00 மணிக்கு, புலியூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதாக
கூறி சென்றார்.
அதன்பின் வீடு திரும்பவில்லை. பின், டெக்ஸ்டைல் நிறுவனத்தில் உள்ள,
'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்தபோது,
திம்மாச்சிபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சரண் என்பவர், அவரது டூவீலரில் அழைத்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பாஸ்கர் கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
