ADDED : ஆக 06, 2026 06:36 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த மேலமுனையனுார் பகுதியை சேர்ந்தவர் வடிவேல், 49; இவரது மனைவி
பூமா, 40; கரூரில் டெக்ஸ் தொழிலாளர்கள். கடந்த, 2 மதியம், 2:00 மணிக்கு,
வீட்டில் இருந்து பூமா, கரூர் அரசு மருத்துவமனையில் உள்ள உறவினரை
பார்க்க செல்வதாக கூறிச்சென்றுள்ளார்.
ஆனால் மீண்டும் வீடு
திரும்பவில்லை. உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் பூமா குறித்து எந்த
தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, காணாமல்போன தன் மனைவியை
கண்டுபிடித்து தருமாறு வடிவேல் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார்
தேடி வருகின்றனர்.
