தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 'மாஜி' எம்.எல்.ஏ., மீது வழக்கு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 'மாஜி' எம்.எல்.ஏ., மீது வழக்கு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் 'மாஜி' எம்.எல்.ஏ., மீது வழக்கு


ADDED : ஆக 06, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை அடுத்த நங்கவரம், சாத்தாயி அம்மன் கோவில் அருகே, நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு, தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைதை கண்டித்து, நகர தி.மு.க., செயலாளர் சுப்பிரமணி தலைமையில் மாவட்ட பிரதிநிதிகள் சங்கர், 46, செந்தில்வேலன், 56, நகர துணை செயலாளர் முத்துவீரன், 57, ஆகியோர் முன்னிலையில் அரசு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இதேபோல், தோகைமலை பஸ் ஸ்டாண்டில், மாஜி எம்.எல்.ஏ., ராமர், 75, தலைமையில், தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us