/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நொய்யல் ரயில்வே கேட்டில் குகை வழிப்பாதை அமைக்கப்படுமா?
/
நொய்யல் ரயில்வே கேட்டில் குகை வழிப்பாதை அமைக்கப்படுமா?
நொய்யல் ரயில்வே கேட்டில் குகை வழிப்பாதை அமைக்கப்படுமா?
நொய்யல் ரயில்வே கேட்டில் குகை வழிப்பாதை அமைக்கப்படுமா?
ADDED : பிப் 06, 2025 05:43 AM
கரூர்: கரூர் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் பகுதியில், குகை வழிப்பாதை அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள் உள்ளனர்.
கரூர் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் வழியாக திருச்சியில் இருந்து கரூர் வழியாக ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு போன்ற இடங்களுக்கும், சென்னை, பெங்களூரு போன்ற இடங்களுக்கும் நாள்தோறும், 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள், நொய்யல் ரயில்வே கேட்டை கடக்கும்போது கேட் மூடப்படுகிறது. சில நேரங்களில் சிமென்ட், நிலக்கரி போன்றவற்றை ஏற்றி வரும் சரக்கு ரயில்களும், கேட்டை நீண்ட நேரம் கடந்து செல்லும் போது வாகன ஓட்டிகளும் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற அவசர வாகனங்களும் ரயில்வே கேட் மூடப்படும்போது கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, நொய்யல் ரயில்வே கேட் அருகே குகை வழிப்பாதை அமைத்து தர வேண்டும் என, வாகன ஓட்டிகள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.