/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெரூர் - சோமூர் பிரிவு சாலையில் மினி ரவுண்டானா அமைக்கப்படுமா?
/
நெரூர் - சோமூர் பிரிவு சாலையில் மினி ரவுண்டானா அமைக்கப்படுமா?
நெரூர் - சோமூர் பிரிவு சாலையில் மினி ரவுண்டானா அமைக்கப்படுமா?
நெரூர் - சோமூர் பிரிவு சாலையில் மினி ரவுண்டானா அமைக்கப்படுமா?
ADDED : மார் 04, 2024 07:31 AM
கரூர் : நெரூர் - சோமூர் பிரிவு பகுதியில், மினி ரவுண்டானா அமைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூரில் இருந்து நெரூர், திருமுக்கூடலுார், சோமூர், கோயம்பள்ளி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் அரசு காலனி வழியாக ஒத்தக்கடை வரை சென்று பின், கோயம்பள்ளி, சோமூர் போன்ற பகுதிகளுக்கு பிரிந்து செல்கிறது.
கரூர் - நெரூர் சாலையில் கோயம்பள்ளி, சோமூர் போன்ற பகுதிகளுக்கு சாலை பிரியும் இடத்தில் நான்கு வழி போக்குவரத்து நடப்பதால், அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் அதிகளவு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சந்திப்பில் வாகனங்களின் அதிவேகம் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனை கட்டுப்படுத்தும் வகையில், சோமூர் பிரிவு அருகே மினி ரவுண்டானா அமைத்து, கூடுதலாக தெருவிளக்கு வசதி கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.