/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நொய்யல் ஆற்றுப்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா
/
நொய்யல் ஆற்றுப்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா
நொய்யல் ஆற்றுப்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா
நொய்யல் ஆற்றுப்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா
ADDED : ஏப் 20, 2025 01:47 AM
கரூர்:
கரூர்-ஈரோடு சாலையில் உள்ள, நொய்யல் ஆற்றுப்பாலத்தில் மின் விளக்குகள் இல்லாத நிலை உள்ளது. இதனால், இரவு நேரத்தில் பாலத்தின் வழியாக செல்லும், வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கரூர்- ஈரோடு சாலையில் கடந்த, 1955 ல் நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. அதை, அப்போது அமைச்சராக இருந்த, முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் திறந்து வைத்தார்.
முக்கியத்துவம் வாய்ந்த நொய்யல் ஆற்றின் மேலே கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்கின்றன.
கடந்த, 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் பாலத்தில் இதுவரை மின் விளக்குகள் போடப்படவில்லை. கரூரில் இருந்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பகல் மற்றும் இரவு நேரத்தில் நடந்து சென்றும் வருகின்றனர்.
நொய்யல் பாலத்தில் மின் விளக்குகள் வசதி இல்லாத தால், பாலத்தின் வழியாக இரவு நேரத்தில் செல்லும் பொது மக்களிடம் இரவு நேரத்தில் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது.
மேலும், பாலத்தின் மேல் பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால், பாலத்தின் அடியில் செல்லும் ஆற்றுப்பகுதிகளில் சமூக விரோத செயல்கள் நாள்தோறும் தாரளமாக நடந்து வருகிறது.
எனவே, நொய்யல் ஆற்றுப்பாலத்தில் மின்கம்பங்கள் அமைத்து, விளக்குகளை போட நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.