/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்யாண பசுபதீஸ்வரா கோவில் லாரி, வேன்கள் வேறு இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா
/
கல்யாண பசுபதீஸ்வரா கோவில் லாரி, வேன்கள் வேறு இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா
கல்யாண பசுபதீஸ்வரா கோவில் லாரி, வேன்கள் வேறு இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா
கல்யாண பசுபதீஸ்வரா கோவில் லாரி, வேன்கள் வேறு இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா
ADDED : டிச 29, 2024 01:23 AM
கரூர், டிச. 29-
கரூர் கல்யாண பசுபதீஸ்வரா கோவில் அருகே நிறுத்தப்படும், லாரிகளை வேறு இடத்தில் நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமல்ல, நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்து, நாள்தோறும் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவில் அருகே ஐயப்பன் கோவிலும் உள்ளது. 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.
இந்நிலையில், கோவிலுக்கு அருகில் உள்ள தெற்கு மாடவீதியில் லாரிகள் மற்றும் மினி வேன்கள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குடியிருப்புகளை மறைத்து லாரிகள் நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:
கல்யாண பசுபதீஸ்வரா கோவிலை சுற்றி லாரிகள் மற்றும் வேன்கள் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு வருகிறது. அப்போது, கரூர் நகரில் வாகன நெரிசல் இல்லை. தற்போது, மாவட்ட தலைநகரான கரூரில், வாகனங்களின் எண்ணிக்கை பெருகி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக வீடுகளுக்கு முன்னால் லாரிகளை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இத னால், லாரிகள் மீது ஏறி, திருடர்கள் வீடு களுக்குள் குதித்து பொருட்களை எடுத்து சென்று விடுகின்றனர். மேலும், பசுபதீஸ்வரா கோவிலுக்கு வரும் பக்தர்களும் பெரும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பக்தர்கள் வரும் வாகனங்கள் மற்றும் வீடுகளில் குடியிருப்பவர்களின் வாகனங்களை நிறுத்த முடியவில்லை.
லாரிகள் மற்றும் வேன்களை வேறு இடத்தில், நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் பயனில்லை. மேலும், நிறுத்தி வைக்கப்படும் லாரிகளில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகின்றன. இதை, கரூர் டவுன் போலீசாரும் கண்டு கொள்வது இல்லை.
கல்யாண பசுபதீஸ்வரா கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கோவிலை சுற்றி குடியிருந்து வரும் பொதுமக்கள் வசதிக்காக, லாரிகள் மற்றும் வேன்களை வேறு இடத்தில் நிறுத்த கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

