/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூடப்பட்ட ஆட்டிறைச்சி கூடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா
/
மூடப்பட்ட ஆட்டிறைச்சி கூடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா
மூடப்பட்ட ஆட்டிறைச்சி கூடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா
மூடப்பட்ட ஆட்டிறைச்சி கூடம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா
ADDED : ஜூன் 12, 2025 01:24 AM
கரூர், கரூர் அருகே, ஆட்டிறைச்சி கூடம் திறக்கப்படாததால், பொதுமக்களுக்கு தரமான இறைச்சி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த, 2006---11ல், தி.மு.க., ஆட்சியின் போது வாங்கல் சாலை, பாலம்மாள்புரத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில், ஆட்டிறைச்சி கூடம் கட்டப்பட்டது. கறிக்கடை வைத்துள்ளோர், மாநகராட்சி நவீன இறைச்சி கூடத்திற்கு ஆடுகளை கொண்டு சென்று, அறுத்து சுத்தப்படுத்தி கறியை மட்டும் எடுத்து, அவரவர் கடையில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நவீன இறைச்சி கூடம் அமைக்கப்பட்டது. இதன் மூலம், மக்களுக்கு சுத்தமான முறையில் இறைச்சி கிடைக்கும் என கூறப்பட்டது.
ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, இறைச்சி கூடம் பூட்டி கிடக்கிறது. அரசின் விதிகள்படி, வெட்டப்படும் ஆடுகளை, முந்தைய நாள் இரவில், ஆட்டிறைச்சி கூடங்களில் விட வேண்டும். மறுநாள், கால்நடை மருத்துவர் அவற்றை பரிசோதிப்பார். பிறகு வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியில், மாநகராட்சி சீல் வைக்கப்படும். அந்த இறைச்சியை தான் விற்பனை செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இறைச்சி கூடம் பூட்டி கிடப்பதால், மாநகராட்சி பகுதியில் அத்தகைய விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. திறந்தவெளியில் ஆடுகளை வெட்டி இறைச்சியாக்கி, சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால், தரமான ஆட்டிறைச்சி கிடைப்பதில்லை. எனவே, ஆட்டிறைச்சி கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.