/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமடைந்த பாசன வாய்க்கால் நடைபாலம் சீரமைக்கப்படுமா
/
சேதமடைந்த பாசன வாய்க்கால் நடைபாலம் சீரமைக்கப்படுமா
சேதமடைந்த பாசன வாய்க்கால் நடைபாலம் சீரமைக்கப்படுமா
சேதமடைந்த பாசன வாய்க்கால் நடைபாலம் சீரமைக்கப்படுமா
ADDED : ஜூலை 23, 2025 01:34 AM
கரூர், கரூர் மாவட்டம், மாயனுார் கதவணையில் இருந்து தென்கரை பாசன வாய்க்கால் பிரிந்து கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம் வழியாக குளித்தலைக்கு செல்கிறது. மகாதானபுரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, தென்கரை வாய்க்கால் மேல் பகுதியில், 50 ஆண்டுகளுக்கு முன் நடை பாலம் கட்டப்பட்டது. அந்த நடை பாலம் சேதம் அடைந்துள்ளது.
அதை சீரமைக்க கோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பொதுமக்கள் நடை பாலத்தின் கைப்பிடியை பிடித்தபடி செல்கின்றனர். தவறினால் பொதுமக்கள் தவறி வாய்க்காலில் விழும் அபாயம் உள்ளது. தற்போது, தென்கரை பாசன வாய்க்காலில், குறுவை சாகுபடிக்காக, மாயனுார் கதவணையில் இருந்து வினாடிக்கு, 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன் சேதம் அடைந்துள்ள, நடை பாலத்தை சீரமைக்க பொதுப்பணி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.