தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சேதமடைந்த பொது கழிப்பிடம் சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த பொது கழிப்பிடம் சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த பொது கழிப்பிடம் சீரமைக்கப்படுமா?


ADDED : அக் 05, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2026 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்,:கரூர் அருகே, முட்புதர் முளைத்து பயனற்ற நிலையில் உள்ள பொது கழிப்பிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாநகராட்சி, திருச்சி பழைய சாலை எஸ்.வெள்ளாப்பட்டி பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அந்த கழிப்பிடம் சில மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. அதை, கரூர் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. மேலும், கழிப்பிடத்துக்குள் நுழைய முடியாதபடி அதிகளவில் முட்புதர்கள் முளைத்துள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளிப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், எஸ்.வெள்ளாப்பட்டி பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்து முட்புதர்களால் சூழப்பட்டுள்ள, கழிப்பிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us