/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கடவூரை சுற்றுலா தலமாக மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
/
கடவூரை சுற்றுலா தலமாக மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
கடவூரை சுற்றுலா தலமாக மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
கடவூரை சுற்றுலா தலமாக மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
ADDED : ஜன 01, 2026 04:42 AM
கரூர்: கடவூரை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்ட எல்லை பகுதியாக கடவூர் உள்ளது. மலை தொடர்கள் அதிகமுள்ள பகுதியாகும். மேலும் குறுநில மன்-னர்கள் ஆண்ட பகுதி என்பதால், அரிய வரலாறு நிறைந்துள்ளது. மாவட்டத்தில் பொன்னணியாறு அணை, இங்கு தான் உள்ளது. மேலும் குறுநில மன்னர்கள் வேட்டையாட பயன்படுத்திய ஒலி வீடுகள், ஓய்வு அறைகள் என அனைத்தும் கடவூரில் உள்ளது.மேலும் இந்த மலை தொடரில் உள்ள நீர் ஊற்று, புள்ளமு-ழுங்கி மலையில் உள்ள பாறைகளுக்கு நடுவே இருந்து வருகி-றது. வாழறும்பு பகுதி, எப்போதும் குளிர்ச்சியாக காணப்படும். மேலும் மரங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியை சுற்-றுலா தலமாக மாற்ற வேண்டும் என, இப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.