/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் - திருச்சி சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
/
கரூர் - திருச்சி சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
ADDED : பிப் 16, 2025 03:40 AM
கரூர்: கரூரில் இருந்து திருச்சி, புலியூர், மணப்பாறை, உப்பிடமங்-கலம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாக-னங்களும் காந்திகிராமம் வழியாக செல்கிறது. இங்கு, வணிக நிறுவனங்கள் உள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதில், கரூர் திருச்சி சாலையில் வடக்கு காந்திகிராமம் இ.பி., காலனி பிரிவு சாலை செல்கிறது.
இந்த சாலை வழியாக காலை, மாலை நேரங்களில், 20க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. இவை அனைத்து இ.பி., காலனி பிரிவு சாலையை கடக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இ.பி., காலனி சாலையில் இருந்து திருச்சி கரூர் சாலையில் திரும்பும் போது விபத்து ஏற்பட்டு வருகிறது.
இரவு நேரங்களில் கரூர்-திருச்சி சாலையில் வாகனங்கள் வேக-மாக வரும் போது, பிரிவு சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்படுகிறது. அங்கு, எஸ்.பி.ஐ., வங்கியும் செயல்பட்டு வருவதாலும், சாலையை கடந்து செல்லும் போது சிக்கல் ஏற்பட்டு வருகிறது. வாகனங்-களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் கரூர் திருச்சி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.