/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தண்ணீர் கேட்பது போல நடித்து தங்க செயின் பறித்த பெண் கைது
/
தண்ணீர் கேட்பது போல நடித்து தங்க செயின் பறித்த பெண் கைது
தண்ணீர் கேட்பது போல நடித்து தங்க செயின் பறித்த பெண் கைது
தண்ணீர் கேட்பது போல நடித்து தங்க செயின் பறித்த பெண் கைது
ADDED : டிச 04, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்ணீர் கேட்பது போல நடித்து தங்க செயின்பறித்த பெண் கைது
கரூர், டிச. 4-
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஓம் சக்தி நகரை சேர்ந்த கதிர்வேல் மனைவி அன்னக்கிளி, 65; இவர் நேற்று முன்தினம் மதியம், வீட்டில் இருந்தார். அப்போது, வெள்ளியணை தேவேந்திர நகரை சேர்ந்த தவசி மனைவி மாரியம்மாள், 37; அன்னக்கிளியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அன்னக்கிளி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த போது, அவர் அணிந்திருந்த, இரண்டு பவுன் தங்க செயினை, மாரியம்மாள் பறித்து சென்று விட்டார். அன்னக்கிளி கொடுத்த புகாரின்படி, மாரியம்மாளை, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.