/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தண்ணீர் கொடுத்த போது பெண்ணிடம் நகை பறிப்பு
/
தண்ணீர் கொடுத்த போது பெண்ணிடம் நகை பறிப்பு
ADDED : டிச 06, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, உத்தமகவுண்டனுார் நடுக்களத்தை சேர்ந்தவர் தங்கராசு, 70. இவரது மனைவி மாரியம்மாள், 66, நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் குடிக்க தண்ணீர் கேட்டார்.
மாரியம்மாள் வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்து வரும்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென அவரை தள்ளி விட்டு, தோடு, மூக்குத்தி ஆகியவற்றை பறித்து சென்றார்.இது குறித்து அவரது கணவர் தங்கராசு கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.