/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயிலில் இருந்து விழுந்த பெண் கால் துண்டானது
/
ரயிலில் இருந்து விழுந்த பெண் கால் துண்டானது
ADDED : ஜூன் 09, 2025 04:42 AM
குளித்தலை: சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த ஆனந்த் மகள் நீலா, 27; காரைக்குடி பல்கலை ஆராய்ச்சி மைய அப்ரண்டிஸ் மாணவி. காரைக்குடி செல்ல சேலத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயிலில் நேற்று பயணித்தார். மாலை, 5:00 மணிக்கு, குளித்தலை ஸ்டேஷனில் ரயில் நின்றது. தண்ணீர் பாட்டில் வாங்க இறங்கினார். வாங்கிக்கொண்டு வருவதற்குள் ரயில் புறப்பட்டதால் ஓடிச்சென்று ஏறினார்.
அப்போது கால் தவறி விழுந்தார். நடைமேடையில் வலது கால் சிக்கி கணுக்கால் பகுதி துண்டானது. இடது கால் முறிந்தது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்த நீலாவை அங்கிருந்தவர்கள் மீட்டு, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கரூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.