/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உலக அமைதிக்காக பெண்கள் திருவிளக்கு பூஜை
/
உலக அமைதிக்காக பெண்கள் திருவிளக்கு பூஜை
ADDED : ஜன 16, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: பனையூர், வீரமாகாளியம்மன் கோவிலில் உலக அமைதிக்காக, திருவிளக்கு பூஜை நடந்தது.
குளித்தலை அடுத்த, நெய்தலுார் பஞ்., பனையூர் கிராமத்தில் வீர மாகாளியம்மன் கோவில் உள்ளது. 800 ஆண்டு பழமையான கோவில். இங்கு தை மாதம் 1ம் தேதி அன்று, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு, உலக அமைதிக்காகவும், பசி பட்டினி இன்றி, நோய் நொடி இல்லாமல் வாழவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், விவசாயம் செழிக்கவும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவும், கல்வி செல்வம் பெருகவும். தொழில் வளர்ச்சி அடையவும், அனைவரும் சந்தோசமாக வாழவும் மும்மாரி மழை பெய்ய வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

