/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் கம்பிக்கு இடையூறான மரக்கிளைகளை அகற்றும் பணி
/
மின் கம்பிக்கு இடையூறான மரக்கிளைகளை அகற்றும் பணி
ADDED : ஜூன் 22, 2025 01:11 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு காற்று மற்றும் மழை காலங்களில், தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது.
இதில் உயர் மின் அழுத்த மின்கம்பி, தெருவிளக்கு மின் கம்பி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார்களுக்கு சொந்தமான மரக்கிளைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, முதல் கட்டமாக மேட்டுமருதுார், கூடலுார், ஆதிநத்தம் ஆகிய இடங்களில் மின் கம்பிகளுக்கு இடையிலான மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்தது.டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா, துணைத்தலைவர் நாகராஜன், செயல் அலுவலர் காந்தரூபன், பணிக்கம்பட்டி துணை மின்வாரிய உதவி பொறியாளர் ராம்குமார் மற்றும் கவுன்சிலர்கள் பணிகளை பார்வையிட்டனர்.