/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டவுன் பஸ்சில் தகராறு தொழிலாளி கைது
/
டவுன் பஸ்சில் தகராறு தொழிலாளி கைது
ADDED : நவ 11, 2025 01:54 AM
குளித்தலை, அரசு டவுன் பஸ்சில், பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை, அரசு பணிமனையை சேர்ந்த அரசு டவுன் பஸ் டிரைவர் கண்ண முத்தம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் 34. இவர் கடந்த 9ம் தேதி காலை, 10:00 மணியளவில் பஞ்சப்பட்டியில் இருந்து, குளித்தலை நோக்கி அரசு டவுன் பஸ்சை ஓட்டி வந்தார்.
அப்போது சுங்ககேட் பஸ் நிறுத்தத்தில், ஒருவர் தகாத வார்த்தையில் பேசி, பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டார். பலமுறை எச்சரித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து டிரைவர் சதீஷ்குமார் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரணை செய்ததில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த காவல்காரப்
பட்டியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி
தியாகராஜன், 58, என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

