ADDED : ஆக 03, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: நாமக்கல் மாவட்டம், வடுகப்பட்டி பகுதியை சேர்ந்த மணி மகன் லோகித், 21; ஓட்டல் தொழிலாளி.
இவர் கடந்த, 30 இரவு உப்பிடமங்கலம் கோலி சோடா கடையில், யமஹா பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து லோகித் சென்று பார்த்த போது, பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த லோகித், போலீசில் புகார் செய்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.