/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காகித ஆலையில் மயங்கி விழுந்த தொழிலாளி பலி
/
காகித ஆலையில் மயங்கி விழுந்த தொழிலாளி பலி
ADDED : ஆக 12, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், நத்தமேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் பிரவீன்குமார், 34; காகித ஆலையில் (டி.என்.பி.எல்.,) ஒப்பந்த அடிப்படையில், வெல்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த, 9 மதியம் காகித ஆலையில் காஸ் பிளான்ட் பகுதியில், பணியில் இருந்த பிரவீன் குமார், திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள், பிரவீன் குமாரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பிரவீன் குமார் உயிரிழந்தார். இதுகுறித்து, பிரவீன் குமாரின் மனைவி வெண்ணிலா, 25, கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.