/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாய் கடித்து 'ரேபிஸ்' பாதிப்பால் தொழிலாளி பலி
/
நாய் கடித்து 'ரேபிஸ்' பாதிப்பால் தொழிலாளி பலி
ADDED : ஆக 20, 2025 01:58 AM
சேலம், நாய் கடித்து, 'ரேபிஸ்' நோயால் பாதிக்கப்பட்ட தறித்தொழிலாளி பலியானார்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், லகுவம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி, 43. தறித்தொழிலாளியான இவர், நாய் வளர்த்து வந்தார். அந்த நாய், 3 மாதங்களுக்கு முன் தெருவில் செல்பவர்களை விரட்டி கடித்துள்ளது. அவரது மகனையும் கடித்தது. ஆத்திரமடைந்த குப்புசாமி, நாயை அடித்துள்ளார். அப்போது அவரது காலிலும், நாய் கடித்துவிட்டது.
மற்றவர்களும், மகனும், நாய் கடி தடுப்பூசியை போட்டுக்கொண்ட நிலையில், குப்புசாமி தடுப்பூசி போடாமல் விட்டுவிட்டார்.இந்நிலையில் ஒரு வாரமாக வெளியே செல்வதை குறைத்துக்கொண்டு, தண்ணீரை பார்த்தாலே பயந்து அலறியுள்ளார். அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, நாய் கடிக்கு தடுப்பூசி போடாமல் விட்டது தான் காரணம் எனக்கூறி, சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர்.நேற்று முன்தினம், அரசு மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்ட குப்புசாமிக்கு பரிசோதனையில், 'ரேபிஸ்' நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மதியம் உயிரிழந்தார். அவருக்கு மனைவி சித்ரா, 38, அரசு கல்லுாரியில் படிக்கும் மகன், பிளஸ் 2 முடித்துள்ள மகள், 9ம் படிக்கும் மற்றொரு மகள் உள்ளனர். அவர்களுக்கும், குப்புசாமியை சிகிச்சைக்கு அழைத்து வந்த உறவினர்களுக்கும், சேலம் அரசு மருத்துவமனையில்
தடுப்பூசிகள் போடப்பட்டன.