தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/தாமரை பூக்களை பறித்த போது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி சாவு

தாமரை பூக்களை பறித்த போது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி சாவு

தாமரை பூக்களை பறித்த போது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி சாவு


ADDED : ஜூன் 04, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:மணவாசி ஐயப்பன் கோவில் கல்லுக்குழி குட்டையில், தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார்.

குளித்தலை அடுத்த மாயனுார் காசா காலனியை சேர்ந்த சண்முகநதி, 40, கூலித் தொழிலாளி. இவருக்கு சரண்யா என்ற மனைவி, திரிஷாத், மிதுனாஸ்ரீ என இரு குழந்தைகள் உள்ளனர். சண்முகநதி கடந்த மாதம், 31 மதியம் வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை.

இவர் மணவாசி ஐயப்பன் கோவில் கல்லுக்குழி குட்டையில் இறங்கி, தாமரை பூக்களை பறித்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி பூக்களை பறிக்க சென்ற சண்முகநதி தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

சண்முகநீதியின் தங்கை தீபா, 36, அளித்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us