ADDED : ஜூன் 24, 2026 04:22 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை அடுத்த மேலசிந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் முகமது யூசுப், 50; விவசாய தொழிலாளி.
இவர் தனக்கு சொந்தமான டூவீலரில், கடந்த, 14 மாலை, 4:30 மணிக்கு, சொந்த வேலையாக திருச்சி சென்றுகொண்டிருந்தார். ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலையில், கவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் மயங்கி கீழே கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு, நேற்று முன்தினம் அதிகாலை பரிதாபமாக பலியானார். இதுகுறித்து அவரது மனைவி ஆயிஷாபிவி, 49, கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
