/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்குவாரி விபத்தில் தொழிலாளி பலி உரிமையாளர், மேலாளர் மீது வழக்கு
/
கல்குவாரி விபத்தில் தொழிலாளி பலி உரிமையாளர், மேலாளர் மீது வழக்கு
கல்குவாரி விபத்தில் தொழிலாளி பலி உரிமையாளர், மேலாளர் மீது வழக்கு
கல்குவாரி விபத்தில் தொழிலாளி பலி உரிமையாளர், மேலாளர் மீது வழக்கு
ADDED : மார் 01, 2024 02:30 AM
கரூர்:கல்குவாரியில்
வேலை பார்த்த தொழிலாளி,- கன்வேயர் பெல்ட் தாக்கி இறந்த சம்பவம்
தொடர்பாக, கிரஷர் உரிமையாளர், மேலாளர் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது.
க.பரமத்தி அருகில், பவித்திரம்
பஞ்சாயத்துக்குட்பட்ட குரும்பட்டி பகுதியில், தனியார் கல்குவாரி
நிறுவனத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த உமேஷ்பஷ்வான், 45, ஓராண்டுக்கு மேலாக
பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கிரசரில் கன்வேயர் பெல்ட்டின்
கியர் பாக்ஸில் பழுதை சரி செய்யும் பணியில், ஆறு பேர் ஈடுபட்டு
கொண்டிருந்தனர்.
அப்போது கன்வேயர் பெல்ட் தாக்கியதில்,
உமேஷ்பஷ்வான் பலத்த காயமடைந்தார். இவரை மீட்டு கரூர் தனியார்
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்,
ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
க.பரமத்தி போலீசார், சம்பவ
இடத்தில் விசாரணை நடத்தினர். இதையடுத்து, தனியார் கிரஷர் உரிமையாளர்
செல்வராஜ், 45, மேலாளர் சுந்தர் ஆகியோர் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது.