/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சென்டர் மீடியனில் மோதி தொழிலாளி பலி
/
சென்டர் மீடியனில் மோதி தொழிலாளி பலி
ADDED : மே 08, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : வேலாயுதம்பாளையம் அருகே, சென்டர் மீடியனில் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராமன் என்பவரது மகன் சுரேஷ், 38; கூலி தொழிலாளி.
இவர் கடந்த, 5ல் வேலாயுதம்பாளையம் - நொய்யல் சாலையில், டி.வி.எஸ்., எக்ஸல் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மொபட் திடீரென நிலை தடுமாறி, எதிரே உள்ள சென்டர் மீடியனில் மோதியது. அதில், தலையில் படுகாயம் அடைந்த சுரேஷ் மீட்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து, சுரேஷின் மனைவி சம்பூர்ணம், 30; கொடுத்த புகாரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

