/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தடுப்பு சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள்
/
தடுப்பு சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள்
தடுப்பு சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள்
தடுப்பு சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள்
ADDED : ஆக 07, 2024 07:37 AM
கரூர்: கரூர், ஈரோடு சாலையில், நொய்யல் அருகில் விரிவாக்கம் செய்யப்பட்டு தடுப்பு சுவர்கள் அமைத்துளம்ளனர்.
அதில் வண்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கரூர்,- ஈரோடு- மாநில நெடுஞ்சாலையில், வாகன நெருக்கடி இருக்கும். இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார், லாரி, பஸ் என தினமும் வாகனங்கள் கடந்து செல்கின்றன. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால், சாலையில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால், சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதில், புன்னம் சாத்திரத்தில் இருந்து நொய்யல் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, சாலையோர தடுப்பு சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணியில் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.