/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேலுச்சாமிபுரத்தில் துாய்மை பணி மேற்கொண்ட பணியாளர்கள்
/
வேலுச்சாமிபுரத்தில் துாய்மை பணி மேற்கொண்ட பணியாளர்கள்
வேலுச்சாமிபுரத்தில் துாய்மை பணி மேற்கொண்ட பணியாளர்கள்
வேலுச்சாமிபுரத்தில் துாய்மை பணி மேற்கொண்ட பணியாளர்கள்
ADDED : செப் 30, 2025 01:03 AM
கரூர், கரூர் வேலுச்சாமிபுரத்தில், த.வெ.க., பிரசாரத்தின்போது நெரிசல் ஏற்ட்ட இடத்தை, நேற்று துாய்மை பணியாளர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டம் கடந்த, 27ல் நடந்தது. அதில், கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை, 18 பெண்கள், 13 ஆண்கள், 5 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என மொத்தம், 41 பேர் உயிரிழந்துள்ளனர். 110 பேர் காயமடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சம்பவம் நடத்த இடத்தில், ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் அந்த இடத்தில், நெரிசலில் சிக்க தப்பி ஓடியவர்களின் துண்டுகள், காலணி உள்பட அவரது உடைகள் ஏராளமானவை சிதறி கிடந்தது. மேலும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டி பைகள் என சிதறி கிடந்தன. அந்த இடம் போர்க்களம் போல காட்சி அளித்தது.
இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம், அந்த அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டதால், இதுவரை சுத்தம் செய்யப்படாமல் இருந்தது. இரண்டாம் நாளாக நேற்று விசாரணை முடிந்த நிலையில், கரூர் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அநத இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அங்கு, குவிந்த குப்பைகளை அகற்றி, லாரிகளில் எடுத்து சென்றனர்.