/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வட்டார அளவில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பயிலரங்கம்
/
வட்டார அளவில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பயிலரங்கம்
ADDED : செப் 29, 2024 03:31 AM
குளித்தலை: குளித்தலை யூனியன் அலுவலக கூட்டரங்கத்தில், நேற்று யூனியன் கமிஷனர் ராஜேந்திரன், ஏ.பி.டி.ஓ., விஜயகுமார் ஆகியோர் தலைமையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், நல் ஆளுமை முன் முயற்சிகளை செயல்படுத்துவதற்கான கண்காணிப்பை மேம்படுத்துதல் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மேற்கொள்-ளப்படும் பணிகளுக்கு தகவல் பலகை வைத்தல், தொழிலாளர்க-ளுக்கு அட்டை வழங்கல், தேவையான ஆவணங்களை பராம-ரித்தல், பதிவேடுகளில் பதிவுகளை மேற்கொள்ளுதல், தொழிலா-ளர்கள் மண்வெட்டி, அரிவாள், கடப்பாறை உள்ளிட்ட பொருட்-களை முறையாக கொண்டு செல்லுதல், உரிய நேரம் வரை பணிகள் மேற்கொள்ளுதல், தொழிலாளர்கள் வருகை பதி-வேட்டை உறுதி செய்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்-டது.பஞ்., செயலாளர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.