/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஆண்கள் பள்ளியில் உலக யானைகள் தின விழா
/
அரசு ஆண்கள் பள்ளியில் உலக யானைகள் தின விழா
ADDED : ஆக 13, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:புகழூர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில், உலக யானைகள் தின விழா நேற்று நடந்தது. அதில், யானைகள் தினம் கொண்டா-டுவதன் நோக்கம், யானையின் ஆயுட்காலம், நில அதிர்வுகளை யானைகள் அறிந்து கொள்ளும் விதம், தமிழகத்தில் யானைகள் அதிகம் வளரும் முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் காட்-டுப்பகுதிகளின் வரலாறு குறித்து, தலைமையாசிரியர் விஜயன் விளக்கமளித்து பேசினார்.
விழாவில், தாவரவியல் ஆசிரியர் ஜெரால்டு, உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் குப்புசாமி, நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர் சரவணன், ஆசிரியர்கள் மனோகரன், சுப்பிரமணி, ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.