/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு மேல்நிலை பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்
/
அரசு மேல்நிலை பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்
ADDED : ஜூன் 06, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியர் (பொ) யுவராஜ் தலைமை வகித்தார். பள்ளி மாணவர்களுக்கு உலக அளவில் சுற்றுச்சூழல் பிரச்னை, உலக வெப்பநிலை உயர்வு, ஓசோன் மண்டல பாதிப்பு, அமில மழை பாதிப்பு போன்றவை பற்றி, பள்ளி தாவரவியல் ஆசிரியர் ஜெரால்டு விளக்கினார்.
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரம் நடப்பட்டது. நிகழ்ச்சியில், தேசிய மாணவர் படை அலுவலர் பொன்னுச்சாமி, நாட்டு நல பணித்திட்ட அலுவலர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.