/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உலக அஞ்சலக தின விழிப்புணர்வு பேரணி
/
உலக அஞ்சலக தின விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 10, 2024 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: உலக அஞ்சல் தினத்தையொட்டி, கரூர் அஞ்சல் கோட்டம் சார்பில், விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
கரூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி, ஜவஹர் பஜார், தாலுகா அலுவலகம் மனோகரா கார்னர் வழியாக மீண்டும் தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. பேரணியில் பங்கேற்ற அஞ்சலக ஊழியர்கள், பார்சல், சேமிப்பு, ஆயுள் காப்பீடு, ஆதார் சேவை உள்ளிட்ட பல்வேறு அஞ்சலக சேவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பன உள்-ளிட்ட, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கொண்டு சென்றனர்.பேரணியில், கரூர் அஞ்சலக கோட்ட கண்கா-ணிப்பாளர் தமிழினி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

