/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆடி மாதம் பிறப்பு கோவில்களில் வழிபாடு
/
ஆடி மாதம் பிறப்பு கோவில்களில் வழிபாடு
ADDED : ஜூலை 18, 2025 02:08 AM
கரூர், கரூர் மாவட்டம் அருகே உள்ள கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, ஆடி முதல் நாளை முன்னிட்டு பால், தயிர், பன்னீர் ,இளநீர், மஞ்சள், திருமணம். பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசித்தனர்.
* குந்தாணிபாளையம் நத்தமேட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், சேமங்கி மாரியம்மன் கோவில், நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில், புகழூர் நகராட்சி மகாமாரியம்மன், நானப்பரப்பு மாரியம்மன், தளவாபாளையம் மாரியம்மன், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில்களில் ஆடி முதல் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.